மழையால் 3வது போட்டி ரத்து: நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது இலங்கை

Date:

நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியது. முதலில் நடந்த டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. அடுத்து நடந்த ஒருநாள் தொடரில் இலங்கை 2-0 என கைப்பற்றி இருந்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் களமிறங்கியது. அந்த அணி 21 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 112 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் வில் யங் அரை சதம் கடந்து 56 ரன்னும், ஹென்ரி நிகோலஸ் 46 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்

கடும் மழை காரணமாக ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை 2-0 என கைப்பற்றியது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...