2024 நாடாளுமன்ற தேர்தல்: தபால்மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு!

Date:

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கை இன்றுடன் நிறைவடைவதாக தேர்தல் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.

இம் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கடந்த ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி முதல் கட்டம் கட்டமாக இடம்பெற்று வருகிறது.

இதற்கமைய, கடந்த ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் அனைத்து காவல்துறை பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.

அத்துடன், கடந்த முதலாம் திகதியும் நான்காம் திகதியும் முப்படையினரும் ஏனைய அரச நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

குறித்த மூன்று தினங்களிலும் வாக்களிக்கத் தவறியவர்களுக்கு நேற்றும் (07) இன்றும் (08) வாக்களிப்பதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...