காலி முகத்திடலில் சமூக நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்வு..!

Date:

காலி முகத்திடலை மத வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக மாத்திரமின்றி ஏனைய நடவடிக்கைகளுக்கும் நிபந்தனைகளுடன் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று (06) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு  ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி  இலங்கை துறைமுக முகாமைத்துவம் மற்றும் ஆலோசனை சேவைகள் பிரைவேட் லிமிடெட்டின் முகாமைத்துவம் மற்றும் நிர்வாகத்தின் கீழ் கட்டுப்படுத்தப்படும் காலி முகத்திடலை சமய நடவடிக்கைகள் அல்லாத ஏனைய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த அனுமதி இல்லை என்ற தீர்மானத்தை அமைச்சரவை நிறைவேற்றியது.

இந்நிலையில், தற்போதைய அரசாங்கம் காலி முகத்திடலில்  சமூக நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை  தளர்த்தியுள்ளது.

காலி முகத்திடலை நிர்வகிப்பதற்கும் பராமரிப்பதற்கும் மாதாந்தம் 2.5 மில்லியன் முதல் 3 மில்லியன் ரூபாய் வரை செலவு செய்யப்படுவதாக  விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

 

 

Popular

More like this
Related

அடுத்து வரும் 36 மணித்தியாலங்களுக்கு மழை நீடிக்கும் வாய்ப்பு!

அடுத்து வரும் 36 மணித்தியாலங்களில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி,...

பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாக்கும் வரைவுச் சட்டமூலம்’ உழைக்கும் மக்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்கே – முன்னிலை சோசலிசக் கட்சி சாடல்!

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ளபயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் Protection of the State...

வேளாண் தொழில் நுட்பம் மற்றும் நிலையான உணவு உற்பத்தியில் இலங்கை – கட்டார் கூட்டுறவு விரிவாக்கம்

வேளாண் தொழில்நுட்பம் (Agri-technology), காலநிலைக்கேற்ற விவசாயம் மற்றும் நிலையான உணவு உற்பத்தி...

சவூதி மன்னரிடம் அனோஜனுக்கு அரச மன்னிப்பு வழங்குமாறு இலங்கை முஸ்லிம் எம்.பிக்கள் கூட்டு வேண்டுகோள்.

சவூதி அரேபியாவில் சிறைத்தண்டனையையும் அபராதத்தையும் எதிர்கொண்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜன் என்பவருக்கு...