ஜம்இய்யத்துல் உலமா நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கும் இலங்கைக்கான பங்களாதேஷின் உயர்ஸ்தானிகருக்குமிடையில் சிநேகபூர்வ சந்திப்பு!

Date:

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் புதிதாக பதவியேற்ற இலங்கைக்கான பங்களாதேஷின் உயர்ஸ்தானிகர் அன்தலிப் எலியாஸ் ஆகியோரிடையிலான சிநேகபூர்வ சந்திப்பொன்று ஜம்இய்யா தலைமையகத்தில் 7ஆம் திகதி இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்களால் ஜம்இய்யாவின் பணிகள், செயற்பாடுகள் தொடர்பில் உயர்ஸ்தானிகர் அவர்களுக்கு அறிமுகம் வழங்கப்பட்டதோடு, இலங்கை வாழ் முஸ்லிம்களின் விவகாரங்கள் குறித்தும் தெளிவுகள் அளிக்கப்பட்டன.

இதன்போது கருத்துத் தெரிவித்த உயர்ஸ்தானிகர் அவர்கள்,

பங்களாதேஷ் முஸ்லிம்களின் பூர்வீகம் மற்றும் வரலாறு தொடர்பில் ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுடன் தகவல்களைப் பகிர்ந்துகொண்டதோடு, இலங்கை நாட்டின் பிரஜைகள் அனைவரும் ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்தோடும் சிறப்பாக வாழ்வதற்கு தனது முயற்சிகள் தொடரும் என்றும் உறுதியளித்தார்கள்.

இக்கலந்துரையாடலின் இறுதியில், உயர்ஸ்தானிகர் அவர்களுக்கு ஜம்இய்யாவின் வெளியீடுகள் கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...