திங்களன்று புதிய அமைச்சரவையை அமைக்க தயாராகும் அரசாங்கம்

Date:

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை எதிர்வரும் 18 ஆம் திகதி நியமிக்கப்பட உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் அநுராதபுர மாவட்டத் தலைவர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியில் நூற்று அறுபது நாடாளுமன்ற  பதவிகளை இந்த வருடம் நாடாளுமன்றத்திற்கு வழங்கி மக்கள் தமது பொறுப்புக்களை நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, புதிய அமைச்சரவை அதிகபட்சமாக 25 அமைச்சர்களைக் கொண்டதாக இருக்கும் எனவும் அதிகபட்சமாக இருபத்தைந்து பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், புதிய அரசாங்கத்தின் கீழ் இராஜாங்க அமைச்சர்களோ அல்லது அமைச்சரவை அல்லாத அமைச்சர்களோ நியமிக்கப்பட மாட்டார்கள் என ஜனாதிபதி அநுர திஸாநாயக்க அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...