அமெரிக்காவின் மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான ஆலோசகராக மகள் டிஃபனியின் மாமனாரை தெரிவு செய்த ட்ரம்ப்!

Date:

அமெரிக்காவின்  ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனல்ட் டிரம்ப், அரபு, மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான மூத்த ஆலோசகராகத் மசாத் பவுலோஸைத் (Massad Boulos) தெரிவு செய்துள்ளார்.

இந்தத் தகவலை Truth Social என்ற சமூகத் தளத்தில் டிரம்ப் அறிவித்தார்.

லெபனானிய அமெரிக்க வர்த்தகரான  பவுலோஸ், டிரம்ப்பின் மகள் டிஃபனியின் (Tiffany) மாமனாவார்.

தேர்தல் பிரசாரத்தின் போது அரபு- அமெரிக்க வாக்காளர்களைத் தங்கள் பக்கம் ஈர்த்ததில்  பவுலோஸ்முக்கியப் பங்காற்றியதைச்  டிரம்ப் பாராட்டினார்.

மத்திய கிழக்கில் அமைதி வேண்டும் என்பதில்  புலோஸ் அதிக நம்பிக்கை கொண்டவர் என்றார்  டிரம்ப். புலோஸ் பொறுப்பேற்ற பிறகு கவனம் செலுத்துவதற்குப் பல விவகாரங்கள் இருப்பதாய் அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

லெபனானின் தற்காலிகச் சண்டை நிறுத்தம், காஸாவில் தொடரும் போர், சிரியாவில் சர்ச்சை போன்றவை அவற்றுள் சில.

 

 

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...