‘இதயம் பேசுகிறது’ கவிதை நூலாசிரியர் கவிமலர் தாயாருடனான கலந்துரையாடல்

Date:

குவியம்:கலை மையம் ஏற்பாடு செய்த 16வது கலந்துரையாடலான ‘இதயம் பேசுகிறது’ கவிதை நூலாசிரியர், கண்டி அக்குறணையைச் சேர்ந்த கவிமலர் அஹ்லா ஹபீப் அவர்களின் தாயாருடன் நிகழ்நிலைவழி கலை மைய நிறுவுநர் ‘மதுரசுந்தரன்’ முஷ்தாக் அஹ்மத் அவர்களின் தலைமையில் 20ஆம் திகதியன்று சிறப்பாக நடந்தேறியது.

இந்நிகழ்வில் கலந்துரையாடல் அதிதியாக கவிமலரின் தாயாரான திருமதி. முர்ஷிதா பேகம் அவர்களும் விசேட அதிதியாக அக்குறணை ஸாஹிரா தேசிய பாடசாலை பிரதி அதிபர் திருமதி. ஸுலைஹா றிஸ்மி அவர்களும் சிறப்பு அதிதியாக ஸாஹிரா பாடசாலை ஆரம்பப் பிரிவு தமிழ் ஆசிரியர் க. துவிஷன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

பாரம்பரிய நிகழ்வுகளோடு ஆரம்பமான இக்கலந்துரையாடலில் தரம் 07ல் கல்வி கற்கும் மாணவி ‘கவிமலர்’ அஹ்லா ஹபீப் அவர்களின் எழுத்தார்வம், கலை பிரவேசம்,  வாசிப்பனுபவம் போன்ற இன்னோரன்ன விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

மேலும், இந்நிகழ்வில் கலை மைய நிர்வாக உறுப்பினர்கள், கலை அபிமானிகள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

தகவல் – குவியம்: கலை மையம்

 

Popular

More like this
Related

மாகாண சபைத் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள விசேட குழு!

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான சட்ட நிலைமையை மீளாய்வு செய்து,...

புதிய தொல்பொருள் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக பேராசிரியர் பி.ஏ. ஹுசைன்மியா நியமனம்!

மலாய், தென் ஆசிய மற்றும் தென்கிழக்காசிய ஆய்வுகளில் சர்வதேச ரீதியாக அறியப்படும்...

பல்வேறு நோய்களுக்கான 350 வகையான மருந்துகளின் விலை குறைப்பு

பல்வேறு நோய்களுக்கான 350 வகையான மருந்துகளின் விலைகளின் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒளடத...

வெலிமடை மத்ரஸா மாணவன் மரணம்: நீதி கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.

வெலிமடைப் பகுதியில் 12 வயதுடைய சிறுவன் ஒருவர் சந்தேகத்துக்கிடமான  நிலையில் மரணமடைந்ததை...