இஸ்ரேல் – காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தை: CIA இயக்குனர் பில் பர்ன்ஸ் கத்தார் விஜயம்

Date:

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே போர்நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்ற  பேச்சுவார்த்தைகளில் முக்கிய முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாட அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பின் (CIA) இயக்குநர் பில் பர்ன்ஸ் கத்தார் தலைநகர் தோஹாவுக்கு விஜயம் செய்துள்ளார்.

பில் பர்ன்ஸ் கட்டார் பிரதமர் மற்றும் வெளிநாட்டு அமைச்சரான முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானியுடன் தற்காலிக நிலைமைகள் குறித்தும், பேச்சுவார்த்தை நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்க உள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மத்திய கிழக்கு ஆலோசகர் பிரட் மெக்குர்க் ஏற்கனவே தோஹாவில் உள்ளதாகவும், கத்தார், எகிப்து மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

10,000க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள்  இஸ்ரேலிய சிறைகளில் இருப்பதாகவும்  காஸாவில் சுமார் 100 இஸ்ரேலிய கைதிகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

காசாவில் இஸ்ரேல் நடத்திய கண்மூடித்தனமான வான்வழித் தாக்குதலில் 33 கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசா மீதான போரை நிறுத்த மறுத்ததால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்ட அமெரிக்கா, எகிப்து மற்றும் கத்தார் தலைமையிலான மத்தியஸ்த முயற்சிகள் இதுவரை தோல்வியடைந்தன.

இஸ்ரேல் ஹமாஸ் போரில்  45,000 க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகளாவர்.

 

 

 

 

 

 

 

Popular

More like this
Related

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பரிதாப பலி !

கரூரில் தவெக பிரசாரத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் மயக்கமடைந்து பலியானவர்களின்...

இலங்கையில் LGBTIQ+ சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் திட்டத்திற்கு இலங்கை அதிகாரப்பூர்வமாக ஒப்புதல்!

இலங்கையில்  (LGBTIQ+) சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் திட்டத்திற்கு இலங்கை...

கொலம்பியா ஜனாதிபதியின் விசாவை ரத்து செய்யும் அமெரிக்கா!

அமெரிக்காவில் வன்முறையைத் தூண்டியதற்காக, கொலம்பிய ஜனாதிபதி குஸ்தாவோ பெட்ரோவின் விசாவை ரத்து...

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அறிவித்தல்!

2024/2025 வரி மதிப்பீட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரி செலுத்துதல்களை 2025...