ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியலுக்கு இடைக்கால தடை உத்தரவு!

Date:

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதி ஒருவரை இணைத்துக் கொள்ளாமல் நால்வரின் பெயர்களை பரிந்துரைப்பதற்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவை, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு (12) பிறப்பித்துள்ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூக் ஹக்கீம்  தாக்கல் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரஞ்சித் மத்தும பண்டாரவை எதிர்வரும் 26ஆம் திகதி நீதிமன்றத்தில் சாட்சியமளிக்குமாறு மேலதிக மாவட்ட நீதிபதி திருமதி சாமரி வீரசூரிய உத்தரவிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதியான நிசாம் காரியப்பரை ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்றுக்கு பெயரிடாமல் தேசியப் பட்டியல் தயாரிப்பதைத் தடுத்து மாவட்ட நீதிமன்ற நீதவான் இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளார்.

 

 

 

Popular

More like this
Related

களு கங்கையை அண்மித்த பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை

களு கங்கை வடிநிலப்பகுதியில் உள்ள நீர்மானி நிலையங்களின் நீர்மட்ட ஆய்வுகளின்படி, அடுத்த...

மோசமான வானிலை; உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

நாடு முழுவதும் உள்ள பல மாவட்டங்களைப் பாதித்த பேரிடர் சூழ்நிலையின் விளைவாக,...

சர்வதேச கொடுக்கல் வாங்கல்களை எளிதாக்கும் PayPal இன்று முதல் இலங்கையிலும் அறிமுகம்

டிஜிட்டல் பொருளாதாரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், PayPal பணப்பரிமாற்ற முறை இன்று (15)...

கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி அவிசாவளையில் பதிவு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று (15) முற்பகல் 5...