கொழும்பில் நங்கூரமிட்டிருக்கும் சீனாவின் ‘பீஸ் ஆர்க்’ மருத்துவமனைக் கப்பல்: இலங்கையர்களுக்கு மருத்துவ சேவை

Date:

சீன மக்கள் குடியரசின் இராணுவ கடற்படையின் மருத்துவமனைக் கப்பலான  ‘பீஸ் ஆர்க்’ இலங்கைக்கு சம்பிரதாயபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது.

கடந்த 21 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்திருந்த குறித்த கப்பல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இலங்கையில் தரித்து நிற்கும் அதேவேளை,இலங்கையர்களுக்கு மருத்துவ சேவையையும் வழங்கி வருகிறது.

முற்றுமுழுதாக மருத்துவ சேவையை மாத்திரம் உள்ளடக்கியிருக்கும் இந்த கப்பல், கடந்த 22 ஆம் திகதி முதல் இலங்கை மக்களுக்கு இலங்கையில் உள்ள சீன தூதரகத்துடன் இணைந்து மருத்துவ சிகிச்சைகள் மற்றும் கிளினிக்குகளை கப்பலில் நடத்திவருகிறது. இச்சேவை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கிறது.

178 மீ நீளமுள்ள ‘பீஸ் ஆர்க்’ மருத்துவமனைக் கப்பலில் கப்டன் டெங் கியாங்கின் தலைமையில் 310 பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு, குறித்த கப்பல் எதிர்வரும் 28 ஆம் திகதி கொழும்பிலிருந்து புறப்படவிருக்கிறது.

பீஸ் ஆர்க் கப்பல் இலங்கைக்கு விஜயம் செய்வது இது இரண்டாவது தடவையாகும்.இதற்கு முன்னர் 2017ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

இலங்கையில் LGBTIQ+ சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் திட்டத்திற்கு இலங்கை அதிகாரப்பூர்வமாக ஒப்புதல்!

இலங்கையில்  (LGBTIQ+) சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் திட்டத்திற்கு இலங்கை...

கொலம்பியா ஜனாதிபதியின் விசாவை ரத்து செய்யும் அமெரிக்கா!

அமெரிக்காவில் வன்முறையைத் தூண்டியதற்காக, கொலம்பிய ஜனாதிபதி குஸ்தாவோ பெட்ரோவின் விசாவை ரத்து...

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அறிவித்தல்!

2024/2025 வரி மதிப்பீட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரி செலுத்துதல்களை 2025...

நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை

இன்றையதினம் (27) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல், தென் மாகாணங்களிலும் கண்டி,...