சமூக நீதிக் கட்சியின் புதிய தலைவராக அர்க்கம் முனீர்

Date:

சமூக நீதிக் கட்சியின் புதிய தலைவராக   அர்க்கம் முனீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சமூக நீதிக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் நஜா முஹம்மத், இளைஞர்களுக்கு புதிய தலைமைத்துவத்தை வழங்க முன்வந்ததன் அடிப்படையில், கட்சியின் தலைமைத்துவ சபை நேற்று முன்தினம் (14) எடுத்த முடிவின் பிரகாரம், கட்சியின் புதிய தலைவராக அர்க்கம் முனீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊடக செயலாளராக சமூக நீதிக் கட்சியில் தனது பயணத்தை தொடங்கிய அர்க்கம் முனீர், பின்னர் கட்சியின் தேசிய அமைப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

சமூக நீதிக் கட்சியானது, சமகால அரசியல் சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு முற்றாக மறுசீரமைக்கப்பட வேண்டும் மற்றும் “ஒரு நீண்ட கால அரசியல் வேலைத்திட்டத்துடன் கட்சியை முன்னே நகர்த்த வேண்டும்” என்கின்ற அடிப்படையில் கட்சியில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கட்சியை மறுசீரமைக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி கட்சியின் தலைமைப்பதவியில் மாற்றம் குறித்த அறிவிப்பை முதற்கட்டமாக வெளியிடவும், கட்சியின் ஏனைய முக்கிய பதவிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்சியின் திட்டங்கள் மற்றும் கட்சியின் நீண்ட பயணத்திற்கான வேலைத்திட்டங்கள் குறித்த அறிவிப்புக்களை அடுத்தடுத்த கட்டங்களில் வெளியிடவும் கட்சி உத்தேசித்துள்ளது.

இவ்வாறு கட்சியின் பதவி நிலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களானது, கட்சியின் அடுத்த பேராளர் மாநாடு வரை செல்லுபடியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

கிரிஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு மே மாதம் விசாரணைக்கு

கிரிஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக...

இலங்கை – ஈரான் வெளிவிவகார அமைச்சர்களிடையே தொலைபேசி உரையாடல்!

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியும், இலங்கை...

நிதி அமைச்சில் சைபர் கொள்ளை: CID விசாரணை தீவிரம்!

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார வளர்ச்சி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின்...

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. மழைவீழ்ச்சி

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை...