“சார்க் நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் புத்தகத்துறைக்கு அதிக VAT வரி!

Date:

இலங்கையில் புத்தகத்துறைக்கு விதிக்கப்படும் 18 சதவீத VAT வரியை உடனடியாக நீக்குமாறும், அடுத்தாண்டு தயாரிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தின்போது இது குறித்து அரசாங்கம் தனது அவதானத்தை செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கொழும்பிலுள்ள ஸ்ரீ சம்புத்வ ஜயந்தி மையத்தின் கேட்போர் கூடத்தில் ஊடகச் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது இலங்கை நூல் வெளியீட்டாளர்கள் சங்கம், இலங்கை நூல் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சங்கம், அகில இலங்கை நூல் விற்பனையாளர்கள் சங்கம், இலங்கை எழுத்தாளர்கள் சங்கம் ஆகிய நான்கு சங்கங்களும் அரசாங்கத்தை கூட்டாக வலியுறுத்தின.

தற்போது புதிதாக ஆட்சியமைத்துள்ள அரசாங்கத்திற்கு பிரேரணையொன்றை முன்மொழிந்துள்ளதாகவும் குறிப்பிட்ட இந்த சங்கங்கள், சார்க் வலய நாடுகளில் இலங்கையில் மாத்திரமே புத்தகத் துறைக்கு 18 VAT வரி அறவிடப்படுவதாகவும், ஏனைய சார்க் நாடுகளில் 0% VAT வரியே அறவிடப்படுவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தது.

 

மேலும், அறிவு மற்றும் கற்றல் தொடர்பான மூலதாரங்களுக்கு வரி விதிப்பதால் ஏற்படுகின்ற நிதியியல் மற்றும் சமூக மாற்றங்கள் தொடர்பில் அரசாங்கம் கருத்திற்கொள்வது அவசியம் என்பதை வலியுறுத்தப்பட்டிருந்தது.

 

 

 

Popular

More like this
Related

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026: அனல் பறந்த பிரசாரம் நிறைவு! நாளை வாக்குப் பதிவு!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப். 23) நடைபெறவுள்ள...

அஸ்வெசும நலன்புரித் திட்ட ஏப்ரல் மாத கொடுப்பனவுகள் இன்று வங்கிக் கணக்குகளில்

அஸ்வெசும (Aswesuma) நலன்புரி நன்மைகள் திட்டத்தின் ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவு இன்றைய...

பல மாகாணங்களில் அதிக வெப்பம்!

நாளை (22) பகல் வேளையில் பல மாகாணங்களில் மனித உடலுக்கு உணரப்படும்...