சிரிய அரச பயங்கரவாதத்தினால் குடும்பத்தை விட்டு பிரிந்த மகன் 50 ஆண்டுகளுக்கு பின் 100 வயதை எட்டுகின்ற தன் தாயை முதன் முறையாக சந்திக்கின்ற அற்புதமான சந்தர்ப்பம்

Date:

அண்மையில் சிரியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளன. அஹமட் அல் ஷாராவின் தலைமையில் உருவாகியுள்ள இந்த மாற்றம் பல்வேறு விதமான செய்திகளை உலகத்துக்கு தந்து கொண்டிருக்கின்றன.

கடந்த 50 ஆண்டுகளாக பஷர் அல் அசாத்தும் அவருடை மகன் ஹாபிஸ் ஆசாத் இருவரும் சேர்ந்து செய்த அராஜகமான ஆட்சியின் விளைவாக மில்லியன் கணக்கான மக்கள் சிறைவாசம் அனுபவித்தருக்கிறார்கள்.

அதேபோன்று மரணித்திருக்கின்றார்கள், வெளிநாடுகளில் தஞ்ச மடைந்திருக்கின்றார்கள். இப்போது தான் அந்த மக்கள் தன்னுடைய தாயகம் குறித்து சிந்திப்பதற்கும் நிம்மதியாக வாழ்வதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.

இச்சூழ்நிலையிலே வெளிநாடுகளில் தஞ்சமடைந்திருந்த மக்கள் தங்களுடை தாய்நாட்டை நோக்கி வருகின்றார்கள். அத்தகைய காட்சிகள் மிகவும் கவனத்தை ஈர்த்த சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகிய ஒர் காணொளி இதுவாகும்.


அப்துல் லத்தீப் சஹீம் என்ற 50 வயது மதிக்கத்தக்க இந்த வயோதிபர் ஆசாத்துடைய அராஜக ஆட்சின் விளைவாக நாட்டை விட்டு வெளியேறி வாழ்ந்தார்.

இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சுதந்திரமாக வாழ்க்கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதால் 50 ஆண்டுகளுக்கு பிறகு தாய்நாட்டுக்கு வந்துள்ளார்.

சிரியாவின் ஹமா என்ற நகரத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர் 100 வயதுடைய தன் தாயை 50 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக சந்திக்கும் அந்த தருணத்தை அல்ஜசீரா வெளியிட்டுள்ளது.

தான் பெற்ற மகனை ஒரு நாளேனும் விட்டு பிரிந்திருக்க முடியாத நிலையில் மரணித்ததுக்கு பின்னரும் கூட இந்த கவலைகள் மறக்க முடியாத ஒன்றாக இருப்பதோடு உயிரோடு இருக்கின்ற தன்னுடைய மகன் வந்து சந்திக்கின்ற அந்தக்கட்டம்  உணர்பூர்வமானது என்பதை இக்காட்சி வெளிப்படுத்துகிறது.

சிரியாவில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் எவ்வளவு பயங்கரமான துன்பத்தை 50 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவத்திருக்கின்றார்கள் என்பதனை இதை விட வேறு சாட்சியமில்லை.

 

 

 

 

 

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...