சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு: அமைச்சரவை அனுமதி

Date:

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக விவசாயத் துறைக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.கடந்த சில நாட்களாக நிலவிய மோசமான வானிலை காரணமாக வீடுகள், நெடுஞ்சாலைகள், வயல் நிலங்கள், விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதாலும், அதிகளவான தடுப்பணைகள், கால்வாய்கள் உடைந்ததாலும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்திருந்தனர்.

விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தின் தரவுகளின்படி, 2024-12-02 ஆம் ஆண்டு நிலவரப்படி, தோராயமாக 91,300 ஏக்கர் நெற்பயிர்கள் முழுமையாகவும், 86,225 ஏக்கர் நெற்பயிர்கள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

மேலும், 173 சிறுபாசன வாய்க்கால்கள் முழுமையாகவும், 1,148 பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 750 ஏக்கர் மரக்கறி பயிர்கள் நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நெல் பயிர்ச்செய்கையில் 02 ஹெக்டேயர் வரை ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்கு  அதிகபட்சம் ஒரு ஏக்கருக்கு ரூ.40,000/- வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சோளம், உருளைக்கிழங்கு, மிளகாய், பெரியவெங்காயம் மற்றும் சோயாபீன் ஆகிய 01 ஹெக்டேயர் (2.5 ஏக்கர்) வரையிலான 05 வகையான பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக ரூ.40,000/- நஷ்டஈடு  வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...