நாட்டில் பல பகுதிகளில் காற்றின் தரம் பாதிப்பு..!

Date:

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரச்சுட்டெண்  இன்றைய தினம் சற்று ஆரோக்கியமற்ற மட்டத்தில் காணப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் சுற்றுச்சூழல் ஆய்வு பிரிவு அறிவித்துள்ளது.

தற்போதைய காலநிலை மற்றும் நாட்டுக்கு வடக்கு திசையிலிருந்து வரும் காற்றின் தன்மை என்பவற்றின் காரணமாக நாடு முழுவதும் காற்றின் தரச்சுட்டெண் 90 முதல் 180 வரையான மட்டத்தில் காணப்படும்.

யாழ்ப்பாணம் மற்றும் பொலன்னறுவை நகரங்களில் காற்றின் தரச் சுட்டெண் ஆரோக்கியமற்ற மட்டத்தில் உள்ளதுடன், நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தர சுட்டெண் சற்று ஆரோக்கியமற்ற மட்டத்திற்கு அதிகரிக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, சுவாச ரீதியான பாதிப்புகளைக் கொண்டுள்ளவர்கள் வைத்திய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நுவரெலியா, களுத்துறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய நகரங்களில் மாத்திரம் இன்றைய தினம் காற்று தரச்சுட்டெண் மத்திம மட்டத்தில் நிலவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...