பலஸ்தீனத்திற்கு ஆதரவாக எழுதியதற்காக ஏறாவூர் இளைஞர் கைது..!

Date:

‘அல்லாஹ் பலஸ்தீனைப் பாதுகாப்பான்’ என தனது குறிப்பேட்டில் எழுதி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஏறாவூர் இளைஞரொருவர் நேற்று (15)  கைது செய்யப்பட்டுள்ளார்.

காரைதீவு பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

60 வருடங்களுக்கு மேலாக பலஸ்தீனை அடிமைப்படுத்த இஸ்ரேல் முனைகிறது. தொழில் நுட்ப ரீதியாக இஸ்ரேல் எவ்வளவு முன்னேறியிருந்தாலும் பலஸ்தீனை அடிமைப்படுத்த அவர்களால் முடியாது. அந்தப் பூமியை அல்லாஹ் பாதுகாப்பான் என தனது குறிப்புப் புத்தகத்தில் எழுதி வைத்திருந்த இளைஞர் ஒருவரை ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவரது இந்தக் கூற்றுக்களின் பின்னால் ஏதேனும் அபிப்பிராயங்கள் உள்ளனவா என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டதாக ஏறாவூர் தெரிவித்தனர்.

கைதான சந்தேகநபரிடம் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...