மாவடிப்பள்ளி துயரில் மரணமான சிறுவர்கள் பேரில் வக்பு சபையும் முஸ்லிம் திணைக்களமும் இணைந்து நிதியுதவி வழங்கி வைப்பு …!

Date:

மாவடிப்பள்ளி வெள்ளத்தில் மரணித்த மத்ரஸா மாணவர்களின் குடும்பங்களுக்கு இலங்கை வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து முஸ்லிம் தரும நம்பிக்கை நிதியத்திலிருந்து தலா ஒரு இலட்சம் ரூபா வழங்கி வைக்கப்பட்டது.

அண்மையில் நாட்டில் ஏற்பட்ட மிகப் பெரும் வெள்ள அனர்த்தத்தின் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன்,  பல உயிர்களும் காவு கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக மாவடிப்பள்ளி விபத்தில் உயிர் இழந்த மத்ரஸா மாணவர்களின் மரணமானதுஇ முழு நாட்டு மக்களையுமே மீளாத்துயரில் ஆழ்த்தியிருந்தது.

இவ்விபத்தில் பாதிக்கப்பட்டு மரணமடைந்த 6 மத்ரஸா மாணவர்களுக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் அவர்களது பரிந்துரையில் இலங்கை வக்ப் சபையும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து முஸ்லிம் தர்ம நிதியிலிருந்து  ஆறு லட்சம் ரூபாவை தலா ஒரு லட்சம் வீதம் மரணமடைந்த மத்ரஸா மாணவர்களின் பெற்றோர்களிடம் காசோலைகளாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கத்தின் பிரதிப் பணிப்பாளர் எம்.ஐ. பிர்னாஸ், சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் யூ.எம். அஸ்லம், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள கணக்காளர் ௭ஸ்.௭ல்.எம். நிப்றாஸ்,மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள கொழும்பு மாவட்டத்துக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம். மஸீன் உற்பட சம்மாந்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் சம்மாந்துறை பிரதேச செயலகத்தினூடாக வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...