குவியம்:கலை மையம் ஏற்பாடு செய்த 16வது கலந்துரையாடலான ‘இதயம் பேசுகிறது’ கவிதை நூலாசிரியர், கண்டி அக்குறணையைச் சேர்ந்த கவிமலர் அஹ்லா ஹபீப் அவர்களின் தாயாருடன் நிகழ்நிலைவழி கலை மைய நிறுவுநர் ‘மதுரசுந்தரன்’ முஷ்தாக் அஹ்மத் அவர்களின் தலைமையில் 20ஆம் திகதியன்று சிறப்பாக நடந்தேறியது.
இந்நிகழ்வில் கலந்துரையாடல் அதிதியாக கவிமலரின் தாயாரான திருமதி. முர்ஷிதா பேகம் அவர்களும் விசேட அதிதியாக அக்குறணை ஸாஹிரா தேசிய பாடசாலை பிரதி அதிபர் திருமதி. ஸுலைஹா றிஸ்மி அவர்களும் சிறப்பு அதிதியாக ஸாஹிரா பாடசாலை ஆரம்பப் பிரிவு தமிழ் ஆசிரியர் க. துவிஷன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
பாரம்பரிய நிகழ்வுகளோடு ஆரம்பமான இக்கலந்துரையாடலில் தரம் 07ல் கல்வி கற்கும் மாணவி ‘கவிமலர்’ அஹ்லா ஹபீப் அவர்களின் எழுத்தார்வம், கலை பிரவேசம், வாசிப்பனுபவம் போன்ற இன்னோரன்ன விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
மேலும், இந்நிகழ்வில் கலை மைய நிர்வாக உறுப்பினர்கள், கலை அபிமானிகள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
தகவல் – குவியம்: கலை மையம்