உலக முஸ்லிம் லீக்கின் இலங்கை கிளையினால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்கள் கையளிப்பு

Date:

சவூதி அரேபியா மக்காவை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகின்ற உலக முஸ்லிம் லீக்கின் கொழும்பு அலுவலகம் ஏற்பாடு செய்த அண்மையில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று கொலன்னாவை மங்களபாய விழா மண்டபத்தில் இடம்பெற்றது.

இலங்கை அலுவலகத்தின் பணிப்பாளராக செயற்படுகின்ற அஷ்ஷெய்க் முஹம்மது இம்ரான் பின் ஜமாலுத்தீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் அல் கஹ்தானி, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் மற்றும் உயர் அதிகாரிககள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த பெறுமதி வாய்ந்த நிகழ்வில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 1780 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு தலா 9000 பெறுமதியான நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த பல வருடங்களாக இந்த அலுவலகமானது இலங்கையின் பல பாகங்களிலும் பாதிக்கப்படக்கூடிய சகல இனங்களையும் சேர்ந்த மக்களுக்குமான நிவாரணங்களை வழங்கி வருவதோடு ஆதரவற்றோர் மற்றும் தேவையுடையவர்களுக்கான உதவிகளையும் இலங்கையிலும் உலகின் பல நாடுகளிலும் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 

 

Popular

More like this
Related

உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...

 CNCI தங்க மற்றும் உயர் சாதனையாளர் 2025  விருதுகளை வென்ற ஹலால் கவுன்சில்

கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து இலங்கை தேசியத்...

யாழ். செல்வா கலையரங்கில் நடைபெற்ற வடக்கு முஸ்லிம் இடம்பெயர்ந்தோர் கூட்டம்.

வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட 35ஆவது வருடத்தை நினைவுகூர்ந்து  31...