சப்ரகமுவ மாகாண மேலதிக கல்வி பணிப்பாளராக ஹுஸ்னா சஜான் பதவி உயர்வு

Date:

சப்ரகமுவ மாகாணத்தின் மேலதிக மாகாண கல்வி பணிப்பாளராக திருமதி ஹுஸ்னா சஜான் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

வரக்காபொல பாபுல் ஹஸன் மத்தியக்கல்லூரியில் ஆசிரியராக கடமையை தொடங்கிய இவர் தெஹியோவிட்ட கல்வி வலயத்தில் உதவிக்கல்வி பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

போராதனை பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் விசேட பட்டமும் முதுமாணி பட்டமும் பெற்ற இவர் இலங்கையில் கல்வியியல் முதுமாணி ((MEd)  பட்டத்தையும், அவுஸ்திரேலியாவில் (MSc) பட்டத்தினையும் பெற்றுள்ளார்.

பிரதி கல்விப் பணிப்பாளராக பணியாற்றிய இவர் தற்போது இலங்கை கல்வி நிர்வாக சேவை (SLEAS) தரம் 1 தரத்தைப் பெற்று சப்ரகமுவ மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

நேர்முகத்தேர்வு மூலம் சப்ரகமுவ மாகாணத்தில் இந்தப் பதவிக்கு வந்த முதலாமவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். நாளைய தினம் இவர் தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...