சம்பல் வன்முறை: ‘முஸ்லிம் வழிபாட்டு தலங்களை கைப்பற்றும் பாசிச சக்திகள்’

Date:

காசி, மதுரா, உ.பி. சம்பல் மஸ்ஜித், அஜ்மீர் தர்கா என முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்களை கைப்பற்ற நினைக்கும் பாசிச சக்திகளின் சதித்திட்டத்தை முறியடிக்க இந்தியா முழுவதும் அனைத்து மாநில தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.

மேற்கு உத்தரபிரதேசத்தில் சம்பல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஷாஹி ஜாமா பள்ளிவாசலில் ஆய்வுப் பணிகள் நடைபெற்றது.

அப்போது அங்கு வெடித்த வன்முறையில் 6 பேர் உயிரிழந்தனர்.  இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் கண்டன அறிக்கையொன்றை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன் வெளியிட்டுள்ளார்.

பாரதீய ஜனதா கட்சியினரும், அவர்களின் ஆட்சியாளர்களும், ஒன்றியத்திலும் மாநிலங்களிலும் அமர்ந்து கொண்டு தாம் நினைக்கும் அனைத்து அதி மிதிகளையும் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நாட்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், 135 கூட்டங்களில் கலந்து கொண்டார். அவற்றில் 110 கூட்டங்களில் இந்திய முஸ்லிம் சிறுபான்மையினரை இழுத்தும், தீண்டியும், தாக்கியும் வசைபாடியும் உரை நிகழ்த்தினார்.

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் பேசிய கூட்டங்களில் எல்லாம் சிறுபான்மை முஸ்லிம்களை விரோதித்தே பேசி வந்திருக்கிறார். பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர்கள் இவ்வாறு ஒரு சார்பின் பிரச்சாரத்தைத் தொடர்ந்து செய்வதால், அது மாநிலங்களிலும் அவ்வப் போது எதிரொலிக்கிறது.

உத்திர பிரதேசம், உத்தராகண்டு, அஸ்ஸாம் போன்ற மாநில முதலமைச்சர்கள் தங்க ளின் பேச்சுக்கள் அனைத்துமே வெறுப்பு அரசியலாகத் தெரியும்படியே சிறுபான்மையினர் வெறுப்பைக் கக்கி வருகின்றனர்.

இவற்றுடன் தங்களின் வெறுப்பு அரசியலை நிறுத்தவில்லை. நாட்டில் உள்ள பிரசித்தமான காசி, மதுரா மஸ்ஜிதுகள் பற்றிய அவதூறுகளைப் பரப்பினர்.

மஸ்ஜித் வளாகங்களில் நடத்தப்படும் மதரஸா கல்விக் கூடங்களை இழுத்து மூடுவதற்கு அரசு உத்தரவு பிறப்பித்தனர். உச்சநீதிமன்றம் தலையிட்டு அதைத் தடுத்து நிறுத்தி இருக்கிறது.

உத்தரபிரதேசத்தில் சம்பல் மாவட்டத்தில் ஐந்நூறு வருடங்களுக்கு மேலாக முஸ்லிம்கள் ஐந்து வேளை தொழுகை நடத்தி வரும் சம்பல் ஷாஹி ஜும்ஆ மஸ்ஜிது ஒரு கோயிலாக இருந்தது அதைத் தோண்டி ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரி வழக்கு மாவட்ட சிவில் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது.

சிவில் நீதிமன்றம், ஷாஹி ஜும்ஆ மஸ்ஜிது நிர்வாகக் குழுவை விசாரிக்கமாலும், அவர்களுக்கு தெரியாமலும், மஸ்ஜிதை தோண்டி ஆய்வு செய்வதற்கு ஒரு சார்பான உத்தரவு பிறப்பித்தது. அரசு அதிகாரிகள், காவல்துறையினர் மஸ்ஜிது வளாகத்தை அடைத்து, தோண்டும் வேலையைத் தொடங்கிவிட்டனர்.

அப்பகுதி முஸ்லிம்கள் இந்த அநியாயத்திற்கு ஒரு விடிவே கிடையாதா ? என்று ஏங்கித் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில் இரண்டாவது முறையாக மஸ்ஜிது வளாகத்தைத் தோண்டத் துணிந்து விட்டனர்.

இதனால் கொதிப்படைந்த முஸ்லிம்கள் மஸ்ஜிது வளாகத்தைத் தோண்டுவதைத் தடுத்து நிறுத்திடக் கூட்டமாகச் சென்றுள்ளனர். காவல்துறையினர் கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய கொடூரம் நிகழ்ந்தது. ஆறு பேர் பலியாகியுள்ளனர்.
பலர் படுகாயம் அடைந்தனர்.

சம்பல் ஷாஹி ஜும்ஆ மஸ்ஜிதை தோண்டுவதையும், அதனை ஒட்டி ஏற்பட்ட கலவரம் பற்றியும், சமுதாய மக்கள் படுகின்ற அவதிகள் குறித்தும் நேரில் சென்று ஆய்வு நடத்தப் போன நாடாளுமன்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் இ.டி. முஹம்மது பஷீர் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பி.வி.அப்துல் வஹாப், அப்துஸ்ஸமத் சமதானி, கே. நவாஸ் கனி, வழக்கறிஞர் ஹாரிஸ் பிரான் ஆகியோர் சென்றனர்.

அவர்களை சம்பல் நகருக்கு நுழைய விடாமல் தடுக்கப்பட்டனர். ஜனநாயக நாட்டில் நடக்கும் ஜனநாயக முரண்பாடு இது.  இந்த ஜனநாயக விரோதச் செயலை நாடாளுமன்ற மேலவை இ. யூ மு. லீக் எம் பி., ஹாரீஸ் மீரான் அவர்கள் கடுமையாக விமர்சித்து அறிக்கை வெயிட்டிருக்கிறார்.

நாட்டில் நடக்கும் கொடுமைகளை இனியும் பொறுத்துப் பார்த்துக் கொண் டிருக்க முஸ்லிம் சமுதாயத்தால் முடியாது என்பது வெளிப்பட்டுவிட்டது! பொறுத்தார் பூமி ஆழ்வார் என்பது மாறி, இப்போது பொறுத்தது போதும் பொங்கி எழுங்கள்! என்று கூறும் காலமாகிவிட்டது. இந்த ஜனநாயக விரோதத்தைக் கண்டித்து விரைவில் எல்லா மாநிலத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியாக வேண்டும்” என  அறிக்கையில்  கூறியுள்ளார்.

 

 

 

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...