பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் மொஹமட் சாலிஹ் நளீம்!

Date:

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக மொஹமட் சாலி நளீம் இன்று பதவியேற்றுக்கொண்டார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில்  சபாநாயகர் முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 87,038 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை வென்றது.

இதன்படி, குறித்த கட்சிக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்று கிடைத்துள்ளதுடன், மொஹமட் சாலி நளீம் குறித்த எம்.பி பதவிக்கு நியமிக்க கட்சி தீர்மானித்திருந்தது.

இவர் ஏறாவூர் நகரசபையின் முன்னாள் நகரசபை தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்!

இன்று (31) மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...

ஃபியூச்சர் பார்ட்டி’ கலைப்பு: கட்சி அரசியலிலிருந்து விலகுவதாக துருக்கியின் முன்னாள் பிரதமர் அறிவிப்பு!

துருக்கியின் முன்னாள் பிரதமரும் 'ஃபியூச்சர் பார்ட்டி' (Future Party) தலைவருமான அகமத்...

எல் நினோ தீவிரமடைகிறது; இலங்கை தயார் நிலையில் இருக்க வேண்டும் என எச்சரிக்கை!

எல் நினோ’ (El Niño) காலநிலை நிகழ்வால் ஏற்படக்கூடிய கடுமையான விளைவுகளை...

தேசிய நூலக சேவையின் தலைவர் இராஜினாமா!

மூத்த பாடலாசிரியர் ரத்ன ஸ்ரீ விஜேசிங்க, தேசிய நூலக மற்றும் ஆவணவாக்கல்...