சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலக்கெடு நிறைவு!

Date:

2024 (2025) கல்விப் ‍பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் இன்றுடன் (10) நிறைவடைவதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று நள்ளிரவுடன் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது முடிவடையும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக பரீட்சை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் ஆரம்பத்தில் 2024 நவம்பர் 05 ஆம் திகதி வரை வழங்கப்பட்டது.

மோசமான காலநிலை காரணமாக பின்னர், அந்த கால அவகாசம் டிசம்பர் 10 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...