அண்மையில் சிரியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளன. அஹமட் அல் ஷாராவின் தலைமையில் உருவாகியுள்ள இந்த மாற்றம் பல்வேறு விதமான செய்திகளை உலகத்துக்கு தந்து கொண்டிருக்கின்றன.
கடந்த 50 ஆண்டுகளாக பஷர் அல் அசாத்தும் அவருடை மகன் ஹாபிஸ் ஆசாத் இருவரும் சேர்ந்து செய்த அராஜகமான ஆட்சியின் விளைவாக மில்லியன் கணக்கான மக்கள் சிறைவாசம் அனுபவித்தருக்கிறார்கள்.
அதேபோன்று மரணித்திருக்கின்றார்கள், வெளிநாடுகளில் தஞ்ச மடைந்திருக்கின்றார்கள். இப்போது தான் அந்த மக்கள் தன்னுடைய தாயகம் குறித்து சிந்திப்பதற்கும் நிம்மதியாக வாழ்வதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.
இச்சூழ்நிலையிலே வெளிநாடுகளில் தஞ்சமடைந்திருந்த மக்கள் தங்களுடை தாய்நாட்டை நோக்கி வருகின்றார்கள். அத்தகைய காட்சிகள் மிகவும் கவனத்தை ஈர்த்த சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகிய ஒர் காணொளி இதுவாகும்.
அப்துல் லத்தீப் சஹீம் என்ற 50 வயது மதிக்கத்தக்க இந்த வயோதிபர் ஆசாத்துடைய அராஜக ஆட்சின் விளைவாக நாட்டை விட்டு வெளியேறி வாழ்ந்தார்.
இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சுதந்திரமாக வாழ்க்கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதால் 50 ஆண்டுகளுக்கு பிறகு தாய்நாட்டுக்கு வந்துள்ளார்.
சிரியாவின் ஹமா என்ற நகரத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர் 100 வயதுடைய தன் தாயை 50 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக சந்திக்கும் அந்த தருணத்தை அல்ஜசீரா வெளியிட்டுள்ளது.
தான் பெற்ற மகனை ஒரு நாளேனும் விட்டு பிரிந்திருக்க முடியாத நிலையில் மரணித்ததுக்கு பின்னரும் கூட இந்த கவலைகள் மறக்க முடியாத ஒன்றாக இருப்பதோடு உயிரோடு இருக்கின்ற தன்னுடைய மகன் வந்து சந்திக்கின்ற அந்தக்கட்டம் உணர்பூர்வமானது என்பதை இக்காட்சி வெளிப்படுத்துகிறது.
சிரியாவில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் எவ்வளவு பயங்கரமான துன்பத்தை 50 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவத்திருக்கின்றார்கள் என்பதனை இதை விட வேறு சாட்சியமில்லை.