புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மனு மீதான விசாரணை இன்று!

Date:

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதற்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இம்முறை நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் 3 வினாக்கள் வெளியான நிலையில், பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களால் 4 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் யசந்த கோதாகொட, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில்  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாளில் 3 வினாக்களுக்கும் இலவச புள்ளிகள் வழங்க தீர்மானித்த நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் முழு கவனம் செலுத்தியுள்ளதாக மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும் புலமைப்பரிசில் பரீட்சை மிகவும் முக்கியமான பரீட்சை எனவும், பரீட்சையில் வழங்கப்படும் ஒவ்வொரு சித்தியும் மிகவும் முக்கியமானது எனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதியின் சட்டத்தரணி, கிராமப்புற மாணவர்கள் பிரபல பாடசாலைகளில் அனுமதி பெறுவதற்கு இதுவே ஒரே வழி எனவும் குறிப்பிட்டார்.

எனவே, இந்தத் பரீட்சையில் ஏதேனும் அநீதி நடந்தால், அது ஒட்டுமொத்த மாணவர் சமுதாயத்துக்கும் பாதகமான விளைவை ஏற்படுத்தும் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...

சுரேஷ் சலே பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்...

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா மாத்தறையில்..!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27...

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...