நத்தார் மற்றும் பண்டிகை காலத்தை முன்னிட்டு, இன்று (24) இலங்கை போக்குவரத்து சபை மேலதிக பஸ் சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்திலிருந்து ஹட்டன், பதுளை, மட்டக்களப்பு போன்ற நீண்ட தூர பகுதிகளுக்கு சுமார் 50 மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.
நாளை (25) நத்தார் தினத்தை முன்னிட்டு, பயணிகளின் அதிகரித்த தேவைகளுக்கேற்ப மேலும் மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.