‘அல்லாஹ் பலஸ்தீனைப் பாதுகாப்பான்’ என தனது குறிப்பேட்டில் எழுதி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஏறாவூர் இளைஞரொருவர் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளார்.
காரைதீவு பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
60 வருடங்களுக்கு மேலாக பலஸ்தீனை அடிமைப்படுத்த இஸ்ரேல் முனைகிறது. தொழில் நுட்ப ரீதியாக இஸ்ரேல் எவ்வளவு முன்னேறியிருந்தாலும் பலஸ்தீனை அடிமைப்படுத்த அவர்களால் முடியாது. அந்தப் பூமியை அல்லாஹ் பாதுகாப்பான் என தனது குறிப்புப் புத்தகத்தில் எழுதி வைத்திருந்த இளைஞர் ஒருவரை ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவரது இந்தக் கூற்றுக்களின் பின்னால் ஏதேனும் அபிப்பிராயங்கள் உள்ளனவா என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டதாக ஏறாவூர் தெரிவித்தனர்.
கைதான சந்தேகநபரிடம் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.