புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ

Date:

புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ  நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அனுபவமிக்க இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் ரொட்ரிகோ முன்னர் இலங்கை இராணுவத்தின் பிரதிப் பிரதானியாக பணியாற்றினார்.

அவர் முன்னர் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் தளபதியாகவும் பணியாற்றினார்.

தற்போதைய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே தற்போது தனது இரண்டாவது சேவை நீடிப்பில் ஈடுபட்டுள்ளார்.

அவருக்கு மற்றுமொரு சேவை நீடிப்பு வழங்கப்படாமல் ஓய்வுபெறும் தீர்மானத்துடன், மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அந்தப் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி அவர் இலங்கை இராணுவத்தின் 25ஆவது இராணுவத் தளபதியாக பதவியேற்கவுள்ளார்.

 

 

 

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...