10 ஆவது நாடாளுமன்றின் புதிய சபாநாயகராக பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விக்கரமரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தலைமையில் இன்றைய (17) நாடாளுமன்ற அமர்வு சற்று முன்னர் ஆரம்பமாகியது.
புதிய சபாநாயகராக, ஜகத் விக்ரமரத்னவின் பெயரை பிரதமர் ஹரிணி அமரசூரிய முன்மொழிந்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.