மறைந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பூதவுடலுக்கு ரணில் அஞ்சலி!

Date:

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மறைந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு இன்று (27) நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

உடல் நலக்குறைவால் தனது 92ஆவது வயதில் உயிரிழந்த முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் டில்லியிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) தனிப்பட்ட விஜயமாக டில்லி சென்றார்.

இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவேந்தல் உரையை ஆற்றுவதற்காக அவர் விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையிலேயே அவர் மன்மோகன் சிங்கின் உடலுக்கும் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

 

Popular

More like this
Related

டெங்கு காய்ச்சலினால் ருஹுனு பல்கலை மாணவி உயிரிழப்பு!

ருஹுனு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இது பல்கலைக்கழக...

அஸ்வெசும விபரங்களை புதுப்பிக்கும் பணிகள் தீவிரம்!

கடந்த 2023ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘அஸ்வெசும’ (Aswesuma) நலன்புரித் திட்டத்துடன் தொடர்புடைய...

கோட்டபாய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு !

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது, தம்மை...