பட்டயக் கணக்காளர் ரியாஸ் மிஹ்லார் தலைமையில் நியமிக்கப்பட்ட புதிய அரச ஹஜ் குழு அங்கத்தவர்களுக்கான நியமனக் கடிதங்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.
குழுவின் தலைவர் ரியாஸ் மிஹ்லார் உறுப்பினர்களான சட்டத்தரணி டி.கே.அசூர், வை.எல்.எம். நவவி, ஆகியோர் நேற்று தமது நியமனக் கடிதங்களை புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும் சுனில் செனவிமிடருந்து பெற்றுக் கொண்டனர்.
குழுவின் உறுப்பினரான பட்டயக் கணக்காளரான பெளசுல் ஹக் தனது நியமனப் பத்திரத்தை இன்று அமைச்சரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
அல்ஹாஜ் பெளசுல் ஹக் அவர்கள் ஹைலன்ட் குரூப் ஒப் கம்பெனியின் முகாமைத்துவ பணிப்பளாராகவும் தலைவராகவும் இலங்கை பைத்துல்மால் நிதியத்தின் உதவித் தலைவராகவும் பணியாற்றுகின்றார்.
மேலும் கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசலில் ட்ரஸ்டியாகவும் இதற்கு முன்னர் பணியாற்றியிருக்கின்றார்.