டெர்மினேட்டர் எனும் இஸ்ரேலிய படை வீரர் இலங்கையில்: பெல்ஜியத்திலிருந்து தகவல்!

Date:

பலஸ்தீனர் ஒருவரைக்கொன்று அவரது உடலை இழிவாக நடத்தியதற்கு பொறுப்பனவராகக் கருதப்படுகின்ற கல் பெரேன் புக் எனும் இஸ்ரேலிய படைவீரர் கொழும்பு வந்திருப்பதாக பெல்ஜியத்தை தளமாகக் கொண்ட ஹித் ரஜப் பவுண்டேஷன் எனும் அரச சார்பற்ற நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

டெர்மினேட்டர் என்று அழைக்கப்படும் இந்த படை வீரரை கைது செய்து சர்வதேச கிரிமினல் நீதிமன்றுக்கு ஒத்துழைக்குமாறு இலங்கை அதிகார பீடங்களை அது அறிவுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஐசிசிக்கு முறையிட்டதாகவும், சர்வதேச ரெட் நோட்டீஸ் விடுக்குமாறு இன்டர்போலுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அது தெரிவிக்கிறது.

ஒகஸ்ட் 9 2024 இல் பலஸ்தீனர் ஒருவரைக்கொன்று அதனை வெற்றியின் சின்னமாக தனது இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டிருந்தார்.

இது சர்வதேச மனித உரிமை சட்டத்தில் இறந்த உடல்களுக்கான கௌரவத்தை பாதிப்பதாகும். அவர் இலங்கைக்கு வந்திருப்பதை பயன்படுத்தி இலங்கை அதிகாரிகள் அவரை பொறுப்புக்கூற வைக்க வேண்டும் எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

 

 

 

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...