புதிய அரசியலமைப்பில் சுகாதாரம்; மக்களின் அடிப்படை உரிமையாக பிரகடனம் – நளிந்த ஜயதிஸ்ஸ..!

Date:

புதிய அரசியலமைப்பு மக்களின் அடிப்படை மனித உரிமையாக சுகாதாரத்தை அணுகுவதற்கான உரிமையை பிரகடனப்படுத்தியுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அந்த உரிமையை மீறும் பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவதற்கு மக்களுக்கு இது உதவும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அகில இலங்கை சிறுநீரக நோயாளர் சங்கத்தின் வருடாந்த சமூக பாதுகாப்பு நிகழ்வில் கலந்து கொண்ட போதே சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வு கொழும்பு மகாவலி கேந்திர மண்டபத்தில் நடைபெற்றது.

நீண்ட வரலாற்றைக் கொண்ட இலங்கையின் சுகாதார சேவையானது மிக விரைவாக கட்டமைப்பு ரீதியான மாற்றமாக மாற்றப்பட வேண்டும்.

சிறுநீரக நோயை மிக விரைவாகக் கட்டுப்படுத்த வேண்டிய சுகாதார சவாலாக தாம் கருதுவதாக தெரிவித்த அமைச்சர், நோயினால் பாதிக்கப்பட்டவர் மட்டுமன்றி ஒட்டுமொத்த குடும்பமும் சகல வழிகளிலும் ஆதரவற்ற நிலையில் உள்ளதாகவும், குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.

ஆரோக்கியம் மற்றும் சமூகத்தின் அடிப்படையில் இந்த நோயை எதிர்கொள்ள வலிமை மற்றும் தைரியம் அப்பணியில், சிறுநீரக நோயாளிகள் மற்றும் அந்த நோயாளிகளின் குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காகவும், கல்விக்காகவும் ஒரு அரசு செய்ய வேண்டிய பல முக்கிய பணிகளை அகில இலங்கை சிறுநீரக நோயாளிகள் சங்கம் பல ஆண்டுகளாக செய்து வருகிறது எனவும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் அகில இலங்கை சிறுநீரக நோயாளர் சங்கத்தின் பிரதம ஆலோசகர் டொக்டர் சஞ்சய ஹெய்யன்துடுவ , பேராசிரியர் மந்திக விஜேரத்ன மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

சங்கத்தின்  இணையத்தளம் அறிமுகம், சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான பரிசுகள் விநியோகம், சிறுநீரகம் தொடர்பான செய்தி இதழின் 29வது பதிப்பு மற்றும் சங்கத்தின் நாட்காட்டி வெளியீடு ஆகியன சிறப்பம்சங்களாக இடம்பெற்றன.

 

 

 

Popular

More like this
Related

கொலம்பியா ஜனாதிபதியின் விசாவை ரத்து செய்யும் அமெரிக்கா!

அமெரிக்காவில் வன்முறையைத் தூண்டியதற்காக, கொலம்பிய ஜனாதிபதி குஸ்தாவோ பெட்ரோவின் விசாவை ரத்து...

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அறிவித்தல்!

2024/2025 வரி மதிப்பீட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரி செலுத்துதல்களை 2025...

நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை

இன்றையதினம் (27) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல், தென் மாகாணங்களிலும் கண்டி,...

ஐ.நா.வில் நெதன்யாகு உரை:கூட்டாக வெளிநடப்பு செய்த பல்வேறு நாடுகளின் தலைவர்கள்!

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டத்தில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்...