புலமைப்பரிசில் பரீட்சை வழக்கு விசாரணை நிறைவு: தீர்ப்பு இம்மாதம் இறுதியில்..!

Date:

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளில் மூன்று வினாக்கள் கசிந்த சம்பவம் தொடர்பான  வழக்கு விசாரணை நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு குறித்து தீர்ப்பு இம்மாதம் 31 ஆம் திகதி அறிவிக்கப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெற்றது. இதன்போது,  குறித்த பரீட்சையின் 3 வினாக்கள் கசிந்தமை வெளியானது.

இந்நிலையில், பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் இணைந்து மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் நீதியரசர்கள் யசந்த கோத்தாகொட, குமுதினி விக்கிரமசிங்க மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் மூன்று நாட்கள் முழுவதுமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்படி, மனு மற்றும் பிரதிவாதிகள் சார்பில் அனைத்து சட்டத்தரணிகளின் வாய்மூல சமர்ப்பணங்கள் நேற்று (18)  நிறைவடைந்தன.

 

 

 

 

Popular

More like this
Related

நிதி மோசடி குற்றச்சாட்டில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரி கைது!

அதிகாரப்பூர்வ மென்பொருள் நிறுவலுடன் தொடர்புடைய நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ், குடிவரவு...

மோசமான வானிலையால் 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 பேர் பாதிப்பு!

இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏழு மாவட்டங்களில் உள்ள 1,113...

நாட்டின் பல மாவட்டங்களுக்கு II ஆம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை!

தற்போது நிலவும் கடும் மழைக்கால வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு...

சுங்கத் திணைக்களம் 1 டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை எட்டியது!

2026 ஆம் ஆண்டிற்கான ஒரு டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை நேற்று முன்தினம் எட்டியுள்ளதாக...