ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்- ஈரானிய அறிஞர் சந்திப்பு..!

Date:

கொழும்பிலுள்ள ஈரான் கலாசார நிலையத்தின் கவுன்சிலர் கலாநிதி பஹ்மன் மொசாமி கூடார்ஸி மற்றும் ஈரானிலிருந்து வருகை தந்துள்ள அறிஞர் ஹுஜ்ஜதுல் இஸ்லாம் வல் முஸ்லிமீன் ஹாத்திம் பூரி அவர்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று (26) நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உப தலைவர்களில் ஒருவரான சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஏ.எம். நிலாம் தலைமையில் கொழும்பிலுள்ள ஈரான் கலாசார நிலையத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது.

மீடியா போரத்தின் வளர்ச்சி மற்றும் செயற்பாடுகள் பற்றியும் நாடு பூராகவும் உள்ள போரத்தின் உறுப்பினர்களின் கடந்த கால செயற்பாடுகள் பற்றியும் போரத்தின் பொதுச்செயலாளர் ஸாதிக் ஷிஹான் இங்கு எடுத்துக்கூறினார்.

ஈரானிய தூதரகத்தின் ஆதரவுடன் நடத்தப்படுகின்ற மகளிர் நிகழ்வுகள் தேசிய தின நிகழ்வுகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கலந்துகொண்டு வருவதை ஞாபகப்படுத்தியதோடு ஈரான் நாட்டுக்கு தமது சில உறுப்பினர்கள் ஊடக சுற்றுலாவுக்கு சென்று வந்ததையும் போரத்தின் பொதுச்செயலாளர் ஸாதிக் ஷிஹான் ஞாபகப்படுத்தினார்.

எதிர்காலத்தில் இலங்கை ஊடகவியலாளர்கள் மற்றும் போரத்தின் உறுப்பினர் களின் துறைசார் மேம்பாட்டை கருத்திற்கு ஊடகத்துறை பயிற்சி வாப்புக்கள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

ஈரான் கலாசார நிலையம் சார்பில் உரையாற்றிய கலாநிதி மொசாமி கூடார்ஸி,

இந்நாட்டில் சகல இனங்களையும் இணைத்து மீடியா போரத்தின் செயற்பாடுகள் நடைபெறவேண்டும் எனவும் எதிர்காலத்தில் ஊடக பயிற்சிகளையும் பாரசீக மொழி அறிவையும் வழங்க தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஈரான் கலாசார நிலையத்தில் இலவசமாக நடைபெறும் ஒரு வருட இரண்டு வருட கால பாரசீக மொழி கற்கையில் கலந்துகொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.

 

 

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...