அமெரிக்கர்கள் விழித்துக் கொண்டு வீருகொண்டெழ பிரார்த்திப்போம்: (படங்கள்)

Date:

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பாரிய காட்டுத்தீ அனர்த்தம் குறித்த ஒரு பதிவு! FB யிலிருந்து..

லாஸ் எஞ்சலிஸில் அமெரிக்க அரசு செய்த குற்றம் என்னவென்றால் தமது நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்காக தீயணைப்பு விமானங்கள், ஹெலி கொப்டர்களையெல்லாம் போதிய அளவு உற்பத்தி செய்வதற்குப் பதிலாக, தமது மக்களின் வரிப் பணங்களையெல்லாம் இஸ்ரேலின் சேவகத்துக்காகக் கொட்டி, விமானங்களையும் ஹெலிகளையும் அப்பாவி மக்களைக் கொன்றொழிப்பதற்காக உற்பத்தி செய்ததுதான்.

அமெரிக்க மக்கள் செய்த தவறு என்னவென்றால் இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு தமது அரசைத் தட்டிக் கேட்காமல் இருந்ததாகும். அவர்கள் இன்று தமது அரசால் தமக்கே புன்னியமுமில்லை என்ற கசப்பான உண்மையை அனுபவிக்கின்றனர். நாம் அவர்களுக்காகப் பிரார்த்தித்தாலும் இல்லாவிட்டாலும் இதுதான் யதார்த்தம்.

அதிலும் முக்கியமான விபரம் என்னவென்றால், அமெரிக்காவின் சியோனிச அரசு உலகெங்கும் செய்கின்ற அக்கிரமங்களுக்கு முன்னால் மக்கள் விழித்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக மக்களைத் தொடர்ந்தும் தூக்கத்தில் வைத்திருக்கின்ற வேலையைத் திறம்படச் செய்கின்ற ஹாலிவூட் பிரபலங்களின் கொள்ளைப் புறத்திலிருந்துதான் தீயே பரவியிருக்கின்றதாம்.

சியோனிச அரசு அந்தப் பிரபலங்களுக்காக வாரி இறைத்த பணத்தில் ஒரு பகுதியையாவது தீயணைப்புப் படைகளை மென்மேலும் வலுப்படுத்தச் செலவளித்திருந்தால் பிரபலங்களின் வீடுகளாவது தப்பியிருக்கும். போதாக் குறைக்கு காப்புறுதி நிறுவனங்களும் தீயணைப்புப் படைகளின் போதாமை காரணமாக நஷ்டங்களை ஈடு செய்ய முடியாத நிலை ஏற்படலாம் என்பதைக் காரணமாக வைத்து கடந்த வருடம் முதல் இலட்சக்கணக்கான காப்புறுதிகளை இரத்துச் செய்துள்ளதாம்.

உண்மையில் சியோனிசத்தின் பிடிக்குள் சிக்குப்பட்டுத் தவிக்கும் அமெரிக்க மக்கள் பாவம். ஆனால் எம்மால் ஒன்றும் செய்ய முடியாது. எம்மைப் போன்ற பாவிகளின் பிரார்த்தனைகளுக்கு அவர்களைப் பாதுகாக்கின்ற சக்தி இருக்குமா என்பதை அறியேன். ஆனால் அவர்கள் விழித்துக்கொண்டு வீருகொண்டெழ வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். இனிமேல் அவர்கள்தான் தமது அரசிடம் கணக்குக் கேட்டு ஏதேனும் செய்வதாக இருந்தால் செய்ய வேண்டும்.

நன்றி:றிஸாம் ஹகீம்

 

 

 

 

Popular

More like this
Related

மீள்பரிசீலனைக் குழுவை HIGHJACK  பண்ணிய அபூஹிந்த்: ‘Framework ஐ நாங்கள் தயாரிக்கவில்லை’ கைவிரிக்கும் அர்க்கம் நூராமித்

அபூ அய்மன்  பின்னணி பல நூற்றாண்டு காலமாக தேசப்பற்றுடனும், இன நல்லிக்க பணிகளை முதன்மைப்படுத்தி...

இலஞ்சம் பெற்ற வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி கைது!

10 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாகக் கோரிப் பெற்ற தெஹியத்தகண்டிய வனஜீவராசிகள்...

காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!

காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் இந்த வார தொடக்கத்தில் இரு பெண்...

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான குழுவின் அறிக்கை நீதி அமைச்சிடம்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்து செய்வது குறித்து  மதிப்பாய்வு செய்து...