கொள்கலன் குற்றச்சாட்டு தொடர்பில் மேல் மாகாண ஆளுநர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு!

Date:

துறைமுகத்திலிருந்து சோதனை செய்யாமல் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிராக மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் இன்று (30) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்  முறைப்பாடு அளித்துள்ளார்.

இது தொடர்பாக விசேட அறிக்கை ஒன்றை ஆளுநர் வெளியிட்டுள்ளார்.

ஆளுநர் என்ற முறையில் தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுவதை இனியும் தாங்கிக்கொள்ள முடியாது, சமீப நாட்களாக என் மீது தொடர்ந்து ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.

இதை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாதுஇ எனவே இன்று நான் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு சென்று இது குறித்து முறைப்பாடு அளித்தேன்.

‘தோல்வியடைந்த குழுவொன்று இவ்வாறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும்போது  மெளனமாக இருக்க முடியாது, மேல் மாகாண ஆளுநர் என்ற முறையில் எனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படும் போது அதனை சகித்துக்கொள்ள முடியாது’ என்றார்.

துறைமுகத்திலிருந்து முறையான சோதனையின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதாகவும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தொடர்புபட்டுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளின்  அரசியல்வாதிகள் பகிரங்கமாக குற்றச்சாட்டினர்.

விடுவிக்கப்பட்ட கொள்கலன்களின் என்ன இருந்ததென தெரியாத நிலையில் சமூகத்தில் இவ்விடயம் பூதாகரமாக வெடித்து தற்போது பேசுபொருளாகியுள்ளது.

 

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...