நாட்டில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்

Date:

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

 

Popular

More like this
Related

டெங்கு காய்ச்சலினால் ருஹுனு பல்கலை மாணவி உயிரிழப்பு!

ருஹுனு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இது பல்கலைக்கழக...

அஸ்வெசும விபரங்களை புதுப்பிக்கும் பணிகள் தீவிரம்!

கடந்த 2023ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘அஸ்வெசும’ (Aswesuma) நலன்புரித் திட்டத்துடன் தொடர்புடைய...

கோட்டபாய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு !

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது, தம்மை...