சிரேஷ்ட ஊடகவியலாளர் ரிஸ்கி ஷெரீப் காலமானார்

Date:

சிரேஷ்ட ஊடகவியலாளர் மாவனல்லை ரிஸ்கி ஷெரீப் நேற்று (10) காலமானார்.

லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தினகரன் பத்திரிகை ஆசிரியர் பீடத்தில் முன்னர் சேவையாற்றிய இவர்,தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையின் செந்தூரம் சஞ்சிகையின் ஆசிரியராகவும் சேவையாற்றியுள்ளார்.

சிறிது காலம் சுகயீனமுற்றிருந்த இவர் மொஹமட் பஸால்,பாத்திமா ஆதிலா,பாத்திமா அகீலா ஆகியோரின் அன்பு தந்தையும், பாத்திமா பஸ்லியாவின் கணவரும் ஆவார்.

இவர் ஒரு சிறந்த எழுத்தாளர், கட்டுரையாளர், கவிஞர், கலைஞர், சிறு கதை எழுத்தாளர், செய்தி தொகுப்பாளர், பத்திரிகையாளர் என்பது மட்டுமல்லாது, கலை இலக்கியத் துறையிலும் பல்வேறு ஆளுமைகளைக் கொண்டவர்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று சனிக்கிழமை கிருங்கதெனிய மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளி வாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

( ஐ. ஏ. காதிர் கான்,பாரா தாஹீர் )

 

 

Popular

More like this
Related

சேதமடைந்த உபகரணங்களுக்காக ரூமேஷ் தரங்கவுக்கு துருக்கிய ஏர்லைன்ஸ் இழப்பீடு!

நாடு திரும்பும் வழியில் தனது விளையாட்டு உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்காக, இலங்கை...

இஸ்லாத்தை விமர்சித்த வழக்கு: கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஞானசார தேரர் ஆஜர்!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்டதாகத் தாக்கல் செய்யப்பட்ட...

2025/2026 ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியின் இறுதிச் செலுத்தலுக்கான காலக்கெடு...

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

சவூதி அரேபியாவின் மேற்குப் பகுதியில் மாறிவரும் பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு,...