பசறை நோக்கி சென்ற தனியார் பேருந்து விபத்தில் 13 பேர் காயம்

Date:

கொழும்பில் இருந்து பசறை நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து இன்று (11) காலை 6:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் 13 பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பிலிருந்து பசறை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று பசறையில் உள்ள 10வது மைல்கல் பகுதியில் விபத்துக்குள்ளாகியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பேருந்து வீதியை விட்டு விலகி முன்பக்க பகுதி பள்ளத்தை நோக்கி வழுக்கிச் சென்று நின்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் விபத்து தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Popular

More like this
Related

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை தொடரும்.

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும்...