மழையால் பாதிக்கப்பட்ட இலங்கை – நியூசிலாந்து 2வது ஒருநாள் போட்டி!

Date:

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஹாமில்டனின் செடான் பார்க் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று (08) காலை 06.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகவிருந்தது.

எனினும், ஹாமில்டனில் தொடரும் தொடர்ச்சியான மழையால் நாணய சுழற்சி கூட மேற்கொள்ளப்படாது போட்டி பாதிக்கப்பட்டுள்ளது.

நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்க‍ை அணி வெள்ளை-பந்து கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

முதலில் நடந்த டி20 தொடரை நியூஸிலாந்து 2:1 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது.

அதன் பின்னர் ஆரம்பமான ஒருநாள் தொடரின் முதல் போட்டியிலும் நியூஸிலாந்து ஒன்பது விக்கெட்டுகளினால் அபார வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

source : ஆதவன்

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...