மூன்று இஸ்ரேலிய பெண் பணயக் கைதிகளை வரவேற்ற தருணம்

Date:

போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி முதற்கட்டமாக 3 பெண் பணயக் கைதிகளை ஹமாஸ் குழு விடுவித்துள்ளது. 471 நாட்களுக்குப் பிறகு அவர்கள் மூவரும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பி குடும்பத்துடன் இணைந்தனர்.

3 இஸ்ரேலிய பெண் பணயக் கைதிகளை ஹமாஸ் படையினர் விடுவித்ததையடுத்து 15 மாதகாலமாக நீடித்து வந்த இஸ்ரேல் – ஹமாஸ் போர் முடிவுக்கு வந்தது.

அங்கு போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததை பலஸ்தீனர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

முதல் நாளான நேற்று ஹமாஸ் 3 இஸ்ரேலிய பணய கைதிகளை விடுவிக்க, அதற்கு ஈடாக இஸ்ரேல் 90 பலஸ்தீனர்களை விடுவிக்க வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது.

போர் ஒப்பந்தத்தின் படி ஹமாஸ் விடுதலை செய்ய உள்ள 3 பணய கைதிகளின் பெயர்களையும், இஸ்ரேல் விடுவிக்கவுள்ள 90 பலஸ்தீனர்களின் பெயர்களையும் 24 மணி நேரத்துக்கு முன்பாகவே வௌியிட வேண்டும்.

இதில் இஸ்ரேல் ஏற்கனவே நேற்று முன்தினம் 90 பலஸ்தீனர்களின் பட்டியலை வௌியிட்டு விட்டது. ஆனால் ஹமாஸ் அமைப்பினர் விடுவிக்க உள்ள பணய கைதிகளின் பெயர்களை  வௌியிடவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாக பணயக் கைதிகளின் பெயர்களை வௌியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக ஹமாஸ் தெரிவித்தது.

இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, விடுவிக்கப்பட உள்ள 3 பணயக் கைதிகளின் பெயர்களை ஹமாஸ் வௌியிடும் வரை காசா பகுதியில் போர் தொடரும் என தெரிவித்தார்.

பிரதமரின் இந்த கூற்றை உறுதி செய்யும் விதமாக வடக்கு, மத்திய காசா பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 100 பேரும், தெற்கு நகரமான கான் யூனிஸ் மீதான தாக்குதலில் 8 பேரும் கொல்லப்பட்டனர். இதனால் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், 3 மணி நேர தாமதத்துக்கு பிறகு, விடுவிக்கப்படும் ரோமி கொனின்(24), ஏமி டமாரி(28) மற்றும் டோரன் ஸ்டான் பிரிசர்(31) ஆகிய பெண் பணய கைதிகள் பெயர் பட்டியலை ஹமாஸ் வௌியிட்டது.

இதைத்தொடர்ந்து ஹமாஸ் அறிவித்தபடி 3 இஸ்ரேலிய பெண் பணய கைதிகள் நேற்று இரவு இந்திய நேரப்படி 8.55 மணிக்கு விடுவிக்கப்பட்டனர்.

இஸ்ரேல்- காசா போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததால் பலஸ்தீன மக்கள் மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் 15 மாதங்களாக நீடித்து வந்த இஸ்ரேல் – ஹமாஸ் போர் முடிவுக்கு வந்தது.

மூன்று இஸ்ரேலிய பெண்கள், பரிமாற்ற ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, தாயகத்துக்கு திரும்பிய நிலையில் , குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டும் நடனமும் கண்ணீரும் கலந்த வரவேற்பில் அவர்களை அன்புடன் ஏற்றுக்கொண்டனர்.

Popular

More like this
Related

மீள்பரிசீலனைக் குழுவை HIGHJACK  பண்ணிய அபூஹிந்த்: ‘Framework ஐ நாங்கள் தயாரிக்கவில்லை’ கைவிரிக்கும் அர்க்கம் நூராமித்

அபூ அய்மன்  பின்னணி பல நூற்றாண்டு காலமாக தேசப்பற்றுடனும், இன நல்லிக்க பணிகளை முதன்மைப்படுத்தி...

இலஞ்சம் பெற்ற வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி கைது!

10 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாகக் கோரிப் பெற்ற தெஹியத்தகண்டிய வனஜீவராசிகள்...

காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!

காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் இந்த வார தொடக்கத்தில் இரு பெண்...

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான குழுவின் அறிக்கை நீதி அமைச்சிடம்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்து செய்வது குறித்து  மதிப்பாய்வு செய்து...