பாடசாலை மாணவர்களுக்கிடையில் நிலவும் மந்த போசணையை கருத்திற்கொண்டு அரசாங்கம் வழங்கி வருகின்ற மதிய போசணைத் திட்டத்தின் கீழ் கறியும், சோறும் வழங்குவதற்கு நியமித்திருந்த போதிலும் வெல்லவாய தெபர ஆர கனிஷ்ட பாடசாலையொன்றில் ரொட்டி விநியோகிக்கப்பட்டிருப்பதாக இன்றைய ஆங்கில பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வெல்லவாய கல்வி வலயத்திலுள்ள தெபர ஆர கனிஷ்ட பாடசாலையிலேயே சோற்றுக்கு பதிலாக ரொட்டியும் பேரீச்சம்பழமும் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பெற்றோர் ஒப்பந்தக்காரரை வினவிய போது சோறு சமைப்பதற்கு ‘அரிசி இல்லை’ என்று கூறப்பட்டுள்ளது.
மரக்கறி, இறைச்சி, மீன் அல்லது முட்டையுடன் சோறும், பழமும் வழங்கப்பட வேண்டும் என்பதே பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்.
இது தொடர்பில் வெல்லவாய கல்விப்பணிப்பாளர் சுசில் விஜயதிலக்க ஒப்பந்தக்காரரை விசாரித்த போது, அவர் அரிசி பெற்றுவந்த அரிசி ஆலை மூடப்பட்டுள்ளதாகவும் அரிசி தட்டுப்பாடு காரணமாகவே ரொட்டி விநியோகிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் விசாரணைகள் மேற்கொண்டு வருதாகவும் வலயக்கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.