வடமத்திய மாகாணத்தில் பரீட்சை வினாத்தாள் கசிவு: இடை நிறுத்தப்பட்ட பரீட்சைகள்

Date:

வடமத்திய மாகாணத்தின் 11ஆம் தரம் சிங்கள இலக்கிய வினாத்தாள் சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக இன்று நடைபெறவிருந்த இறுதிப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண அமைச்சின் செயலாளர் சிறிமேவன் தர்மசேன தெரிவித்துள்ளார்

அதன்படி  600க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் உரிய வினாத்தாள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதுடன் பரீட்சை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு மற்றுமொரு வினாத்தாள் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த முறைகேடு எவ்வாறு இடம்பெற்றது என்பதை கண்டறிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி இதனுடன் தொடர்புடையவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் மாகாண கல்விச் செயலாளர் சிறிமெவன் தர்மசேன வலியுறுத்தியுள்ளார்.

மேலும் விரைவில் குறித்த பாடத்திற்கான பரீட்சையை நடத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சிறிமெவன் தர்மசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும்...

இலங்கையின் பேசப்படாத தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள்

-ரிசா யெஹியா சிரேஷ்ட கட்டிடக் கலைஞர். பகுதி-1 இலங்கையில் தேசிய பாதுகாப்பு இன்னும் பெரும்பாலும்...

பொல்பிட்டியவில் காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்களும் மீட்பு!

பொல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரஹேனகம பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு...

மோசமான வானிலை: பரீட்சைகள் குறித்து நாளை விசேட கலந்துரையாடல்!

நிலவும் மோசமான வானிலை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, நடைபெறவுள்ள தரம் 5...