அஸ்வெசும கொடுப்பனவு பெறாத குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு ரூ. 6,000 கொடுப்பனவு

Date:

அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்காத குடும்பங்களைச் சேர்ந்த அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் 6,000 ரூபா கொடுப்பனவு, வவுச்சர் முறையில் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பெற்றோரை இழந்த குழந்தைகள், மாற்றுத்திறனாளி தாய் அல்லது தந்தை உள்ள குடும்பங்களின் குழந்தைகள், அநாதை இல்லங்களில் படிக்கும் சிறு பிள்ளைகள் மற்றும் சிறப்புக் காரணங்களால் ஆதரவற்ற பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இவ்வுதவித்தொகை வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, பயனாளிகள் அல்லாத சிறுவர் அபிவிருத்தி நிலையங்களிலிருந்து பாடசாலைகளுக்கு வரும் சிறார்களுக்கும் இலவசமாகக் கல்விகற்கும் மாணவர்களுக்கும் கொடுப்பனவுகள் வழங்கப்படும்.

300க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 6,576 பாடசாலைகளைச் சேர்ந்த பயனாளிகள் அல்லாத குடும்பங்களின் அனைத்து குழந்தைகளுக்கும் இந்த உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.

 

 

 

 

 

 

 

1 COMMENT

Comments are closed.

Popular

More like this
Related

‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’: வரலாற்று நூல் வெளியீட்டு விழா கண்டியில்!

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு சேவைகள்...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் ரஷ்ய தூதுவர் இடையில் முக்கிய சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் நய்யார் நசீர்,...

தேர்தலுக்குத் தயாராகும் தமிழகம்: இன்றுடன் பிரசாரங்கள் நிறைவு

ஏப்ரல் 23ம் திகதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில்,...

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...