பாராளுமன்றில் கருத்து தெரிவித்த அவர், இது தொடர்பான அமைச்சரவை ஒப்புதல் பெற்றுக்கொள்ளப்படும் என்று நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி நேற்று நாடாளுமன்றத்தில் முன்வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
மேலும் சுத்தமான இலங்கை திட்டத்தில் அனைத்து விதமான குறைடுகளுக்கும் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரைகாலமும் காலை உணவு, பகல் உணவு மற்றும் மாலைநேர தேநீருக்காக 450 ரூபாவே அறவிடப்பட்டு வந்தது.
காலை உணவு – 100
பகல் உணவு – 300
மாலைநேர தேநீர் – 50
அதற்கமைய அந்த கட்டணத்தை 2 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
காலை உணவு – 600
பகல் உணவு – 1200
மாலைநேர தேநீர் – 200. பெப்ரவரி மாதம் முதல் புதிய விலை அமுலுக்கு வரும்.