புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் மேன்முறையீடு செய்யலாம்!

Date:

2024ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மேன்முறையீடுகளை இணையவழி ஊடாக சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது.அதன்படி, எதிர்வரும் 27ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி வரை இதற்கான காலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று வெளியாகின.

புலமைப் பரிசிலை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிக்க கூடியவர்கள் 20,000 என்பதுடன், விசேட தேவையுடைய 250 விண்ணப்பதாரிகள் ஏலவே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள, பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல் என்பவற்றைக் கொண்டு, பாடசாலை பரீட்சை பெறுபேறு ஆவணத்தை தரவிறக்கம் செய்துக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...

வியட்நாம் – இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05...

தெனியாயவில் பரவும் காய்ச்சல் குறித்து ஆராய விசேட குழு!

தெனியாய வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வேகமாகப் பரவி வரும்...

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

2030- ஆம் ஆண்டுக்குள் ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தை ஒரு பில்லியன் டொலராக...