இன்று இஸ்ரேல் -ஹமாஸ் யுத்த நிறுத்தம் அமுலாகியுள்ள நிலையில் காசாவின் சகல பிரதேசங்களிலும் ஹமாஸ் இயக்கத்தின் பொலிஸ் படை தன்னுடைய அதிகாரத்தை பரவலாக்கும் வகையிலே இயங்க ஆரம்பித்திருக்கிறது.
இதுகுறித்து இஸ்ரேல் இராணுவ வானொலி ஒன்று இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
இந்தளவு கடுமையாக யுத்தம் நடந்த சூழ்நிலையிலும் கூட எந்தவொரு கணத்திலும் காசா மீதான தன்னுடைய அதிகாரத்தை இழக்காத ஒரு பலம் வாய்ந்த இயக்கமாக ஹமாஸ் இயக்கம் இருந்திருக்கிறது என்றும் அது இன்னும் இன்னும் தன்னுடைய அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் தனக்குள் வைத்திருப்பதற்கு அது திட்டம் வகுத்திருக்கிறது என்றும் மிகவும் ஆச்சர்யத்துடன் செய்தி வெளியிட்டிருக்கிறது.