இஸ்ரேலின் 13 ஆவது செனல் அறிவித்துள்ளதன் பிரகாரம் யுத்தம் நிறுத்த ஒப்பந்தம் இன்னும் ஒரு சில தொழில்நுட்ப காரணங்கள் மாத்திரமே எஞ்சியிருக்கின்றன.
இந்த நிலையில் இன்றையதினம் காசாவுக்கும் இஸ்ரேலுக்குமிடையிலான யுத்த நிறுத்தம் சம்பந்தமான அறிவிப்பு விடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காஸாவில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்ய மத்தியஸ்தம் செய்பவர்கள் கத்தாரில் மீண்டும் கூடியுள்ளனர். இஸ்ரேலும் ஹமாஸும் இது குறித்த ஒரு ஒப்பந்தத்தின் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளன.
தோஹாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய கத்தார் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மஜீத் அல்-அன்சாரி, பேச்சுவார்த்தைகள் “இறுதி கட்டத்தில்” இருக்கிறது என்றும், ஒப்பந்தம் ஏற்படுவதைத் தடுத்த முக்கிய பிரச்சினைகள் “தீர்க்கப்பட்டுள்ளன” என்றும் கூறினார்.