துறைமுகத்திலிருந்து சோதனை செய்யாமல் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிராக மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் இன்று (30) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இது தொடர்பாக விசேட அறிக்கை ஒன்றை ஆளுநர் வெளியிட்டுள்ளார்.
ஆளுநர் என்ற முறையில் தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுவதை இனியும் தாங்கிக்கொள்ள முடியாது, சமீப நாட்களாக என் மீது தொடர்ந்து ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.
இதை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாதுஇ எனவே இன்று நான் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு சென்று இது குறித்து முறைப்பாடு அளித்தேன்.
‘தோல்வியடைந்த குழுவொன்று இவ்வாறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும்போது மெளனமாக இருக்க முடியாது, மேல் மாகாண ஆளுநர் என்ற முறையில் எனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படும் போது அதனை சகித்துக்கொள்ள முடியாது’ என்றார்.
துறைமுகத்திலிருந்து முறையான சோதனையின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதாகவும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தொடர்புபட்டுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளின் அரசியல்வாதிகள் பகிரங்கமாக குற்றச்சாட்டினர்.
விடுவிக்கப்பட்ட கொள்கலன்களின் என்ன இருந்ததென தெரியாத நிலையில் சமூகத்தில் இவ்விடயம் பூதாகரமாக வெடித்து தற்போது பேசுபொருளாகியுள்ளது.